எஸ் பி தலைமையில் பொங்கல் கொண்டாடிய காவலர்கள்

தருமபுரி நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Update: 2025-01-15 01:36 GMT
தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை நாடெங்கும் வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தை முதல் நாளான சூரியன் பொங்கல் அனைத்து வீடுகளிலும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை தருமபுரி நகர காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், சரக துணை கண்காணிப்பாளர் சிவராமன், நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன், முன்னிலையில் கிறிஸ்துவ பாதிரியார் ஜேசு பிரபாகர், இஸ்லாமியர் ஜமாத் தலைவர் ஐ.எஸ்.பாபு கலந்து கொண்டனர். மேலும் காவலர்கள் ஒரே கலரில் பாரம்பரிய புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காவல் நிலையம் முன்பு பாரம்பரியம் மாறாமல் புது மண்பானைக்கு வண்ணக்கோலமிட்டு கரும்புகளால் அலங்கரம் செய்து பொங்கல் வைத்தனர். பின்னர் மாயிலை தோரணம் கட்டி காவலர்கள் இஸ்லாமியர் கிறிஸ்தவர் ஆகியோர் ஒன்றிணைந்து பூஜை செய்து சமுத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் இனிப்பு மற்றும் பாரம்பரிய பொங்கல் உணவு அனைவருக்கும் வழங்கினார். இதனை தொடர்ந்து பெண் காவலர்களுக்கு தனியாகவும் ஆண் காவலர்களுக்கு தனி தனியாகவும் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Similar News