கவனிப்பாரற்று இருக்கும் திருவள்ளுவர் சிலை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை கேட்பாடற்று இருக்கின்றது.
கவனிப்பாரற்று இருக்கும் திருவள்ளுவர் சிலை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம். கன்னியாகுமரி மாவட்டத்தில், அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25 வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை முன்பு பொதுமக்கள் உட்பட அனைவரும் போட்டோ எடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று திருவள்ளுவர் தினம் தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை கேட்பாடற்று இருக்கின்றது.