மாத்தூர் வட்டம் மதயானைப்பட்டி கோரையாறு பகுதியில் மணல் கடத்துவதாக மாத்தூர் எஸ்ஐ கனகராஜ் கிடைத்த தகவலை யடுத்து அங்கு சென்று பார்க்கையில் மதயானைப்பட்டி-யை சேர்ந்த மூக்கன் 45 மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரிய வந்தது. மாட்டு வண்டி கால் யூனிட் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மூக்கனிடம் போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.