குடும்பம் குடும்பமாக மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு விவசாய நிலங்களில் குடும்பம் குடும்பமாக மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

Update: 2025-01-15 08:44 GMT
இன்று ஜனவரி 15 மாட்டு பொங்கல் தினத்தை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக மாம்பாடி கிராமத்தில் குடும்பம் குடும்பமாக தங்களது விவசாய நிலத்தில் கால்நடைகளை அலங்காரம் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு செய்த பின்னர் விவசாய நிலத்தில் படையல் இட்டு பொங்கல் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நன்முறையில் அறுவடை நடைபெற்றதற்கு நன்றி கூறும் வகையில் இயற்கைக்கு பொங்கல் வைத்து பின்னர் பட்டாசுகளை வெடித்து உறவுகளுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

Similar News