பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர்.
மதுரையில் உள்ள பென்னி குயிக் திருவுருவ சிலைகளுக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இன்று (ஜன.15) தளபதி எம்எல்ஏ தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந் நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.