ஓய்வு பெற்ற ரயில்வே இன்ஸ்பெக்டர் ஆசிட் குடித்து பரிதாப சாவு

சூரமங்கலம் போலீசார் விசாரணை

Update: 2025-01-15 11:41 GMT
சேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிபட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி. ரயில்வே கேட்டரிங் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அவர் ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி வீட்டில் இருந்த அவர் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். வாய்ப்பகுதி எல்லாம் காயமடைந்து இருந்த நிலையில் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News