பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கருங்கல்

Update: 2025-01-15 11:17 GMT
குமரி மாவட்டம் கருங்கல் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் (78). மீன் வியாபாரி. தற்போது மகள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மத்தியாஸ் பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே கருங்கல் அருகே சுண்டவிளையில் உள்ள ஒரு பள்ளத்தில் மத்தியாஸ் இறந்து கிடப்பதாக மகள் மற்றும் உறவினர்களுக்கு இன்று தகவல் கிடைத்தது.       இதை அடுத்து கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மத்தியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.        போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மத்தியாசுக்கு கண் பார்வை குறைபாடு இருந்ததும்,  இதனால் அவர் நடந்து சென்ற போது பள்ளத்தில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News