கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவலூரில்,திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமை வகித்தார். கோவல் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கவிஞர் பாரதி மணாளன் வரவேற்றார். அறக்கட்டளையின் பொருளாளர் பழ. அருள்மொழி அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.