மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி விவசாய அணி,விவசாய தொழிலாளர் அணி, மகளிர் தொண்டரணி, ஆகியவற்றின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்குமாவட்ட திமுக செயலாளர் மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுராசெந்தில் தலைமை வகித்தார்.திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திமுகதலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய நகர பேரூர் கழகசெயலாளர்கள் விவசாய அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.