புதுப்பட்டி கிராம மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளரும்,நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனருமான ஸ்ரீ தேவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த குடிமக்கள் 250 பேருக்கு பெட்ஷீட்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கினார்.;
நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில் ரான்சம் அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது.கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட ரான்சம் அறக்கட்டளை சார்பில், நாமக்கல் மாவட்டம் நா.புதுப்பட்டி பகுதியின் தன்னார்வலர்கள் மற்றும் நாமக்கல் எஸ்.எஸ்.ஏ. ஏனென்ஸி மோகன்,கொங்குநாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், இணைந்து, கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடினர்.இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளரும் , நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனருமான ஸ்ரீ தேவி மோகன் கலந்து கொண்டு மூத்த குடிமக்கள் 250 பேருக்கு பெட்ஷீட்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை வழங்கி அவர் பேசுகையில்... “ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்வதே கிறிஸ்துமஸின் உண்மையான சாரம்” என நெகிழ்ச்சியுடன் வலியுறுத்தினார்.இந்நிகழ்வில் ரான்சம் அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன்,அறக்கட்டளை நிர்வாகிகள்,புதுப்பட்டி தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். “ஏழைகளுடனும் பாதிக்கப்பட்டவர்களுடனும் பகிர்வு” என்பதை உணர்த்தும் வகையில், அழகிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி, சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் நினைவுக்குரிய விழாவாக மாறியது என்றால் மிகையாகாது.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை நாமக்கல் எஸ்.எஸ்.அக்ரோடெக் நிறுவனர் ரெக்ஸ் தொகுத்து வழங்கினார்.