அரசு பள்ளி மாணவர்களின் சாதனை நிகழ்வு பாராட்டு விழா
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களின்சாதனை நிகழ்வுக்கு பாராட்டு விழா நடந்தது.;
குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களின்சாதனை நிகழ்வுக்கு பாராட்டு விழா நடந்தது. குமாரபாளையம் அரசுபள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டு விழா. வட்டாரகல்வி அலுவலர் அருள், வட்டார வளமேற்பார்வையாளர் கனேஷ் குமார் தலைமையில் நடந்தது. இணையவழிக்கல்வி, கல்விக் கண் திறந்த காமராஜர் அமைப்பின் சார்பில் நடந்த, கல்வி மாலை நிகழ்ச்சியில், அஞ்சல் அட்டை சாதனை நிகழ்வு நடந்தது. இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணாக்கர்கள், பங்கேற்றனர். அஞ்சல் அட்டையில் தேசிய சின்னங்கள், தேசத் தலைவர்கள், வரைந்த செயல்பாடு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் சாதனை நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது. மாநிலம் ,முழுதும் இந்த நிகழ்வில் 9 ஆயிரம் பேர் பங்கேற்றது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. ஆலாங்காட்டுவலசு தலைமையாசிரியை புனிதா, தட்டான்குட்டை தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், வீரப்பம்பாளையம் உதவி தலைமை ஆசிரியர் பிரபு ஆகியோர் சாதனை படைத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த தட்டாங்குட்டை ஆலாங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம், அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட பெரும்பாலான அரசு பள்ளியினர் பங்கேற்று சாதனை படைத்தனர்.