திருக்குறளை படித்தால் மட்டும் போதாது. வாழ்வில் பின்பற்ற வேண்டும்- செங்குட்டுவன் பேட்டி.

திருக்குறளை படித்தால் மட்டும் போதாது. வாழ்வில் பின்பற்ற வேண்டும்- செங்குட்டுவன் பேட்டி.

Update: 2025-01-15 09:28 GMT
திருக்குறளை படித்தால் மட்டும் போதாது. வாழ்வில் பின்பற்ற வேண்டும்- செங்குட்டுவன் பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே புத்தாம்பூரில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று திருக்குறள் ஒப்புவிக்கும் மாணாக்கர்களுக்கு தனது பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி வருகிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, 133 அதிகாரத்தில் 1330 குறட்பாக்கள் மனிதர்கள் வாழும் காலத்தில் நெறியோடு வாழ்வதற்காக வள்ளுவ பெருந்தகை தாய் மொழியாம் தமிழில் வாரி வழங்கியுள்ளார். இதனை ஒவ்வொரு மாணாக்கர்களும் திருக்குறளை படித்தால் மட்டும் போதாது, அவர்கள் வாழ்வில் திருக்குறள் நெறியோடு வாழ வேண்டும். அப்போதுதான் சிறந்த சமுதாயம் உருவாகும் என தெரிவித்தார். மேலும், தனது கல்லூரியில் சேரும் மாணாக்கர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்தால் மூன்று வருட படிப்பு இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Similar News

கைது
ஆடுகள் பலி