விசைத்தறிகள் அழுவு
'பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தால்' விசைத்தறிகள் மேம்படாமல் அழிவை சந்திக் கின்றன.
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, 25 லட்சத் துக்கும் மேற்பட்ட விசைத்தறி களில் பல லட்சம் நெசவாளர்கள், தொழிலாளர்கள், அதை சார்ந்த தொழில் செய்வோர் வாழ்வா தாரம் பெறுகின்றனர். கடந்த சில ஆண்டாக தானி யங்கி தறிகளால் விசைத்தறி தொழில் முற்றிலும் பாதித் துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்றுமதி தடையால் ஜவுளி உற்பத்தி பாதித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து 'எம். எம்.எப்.,' எனப்படும் செயற்கைஇழை பஞ்சு, நுால் இறக்கு மதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதால், உள்நாட்டில் மூலப்பொருட்கள் விலை அதி கரித்துள்ளது. பிற நாடுகளுக்கு ஜவுளியாக ஏற்றுமதி செய்ய இய லவில்லை. மாறாக பிற நாட்டின் துணிகள், ஆயுத்த ஆடைகள் வரு கையால் ஜவுளி தொழில் நலி வடைகிறது. இப்பிரச்னைகளை முன்பே அறிந்த மத்திய அரசு, விசைத்தறிகள் மேம்பட, 'பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை’ அறிவித்தது. அதன் மூலம், நெசவாளர் களுக்கு காப்பீடு, சூரிய ஒளி மின் தகடு அமைக்க, 50 சதவீத மானியம், விசைத்தறிகள் மேம் பட, 50 சதவீத மானியம் வழங்க அறிவித்தது.பின்,இத்திட்டத்தைசெம்மைப்படுத்தி நடைமுறைப் படுத்துவதாக கூறி கடந்த, 2019ல் தற்காலிகமாக நிறுத்தியது. திட் டத்தை நிறுத்தி ஆறு ஆண்டுகளா கியும் புதிய அறிவிப்பு வராததால், விசைத்தறி உரிமையாளர்கள் கடு மையாக பாதித்துள்ளனர்.