அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு
வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னடார் ஊராட்சியில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தென்னடார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், நாகை மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளருமான அன்புவேலன் ஏற்பாட்டில், நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் ஆலேசனையின் பேரில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்களுக்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில், முன்னாள் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கோபு , திமுக வார்டு செயலாளர்கள் அன்பழகன், செந்தில், பார்த்தசாரதி, திமுக நிர்வாகிகள் சந்திரமோகன், சிவலிங்கம் ,கிருஷ்ணமூர்த்தி, காசிநாதன், பாலமுருகன், சிலம்பரசன், குமார், சேரன், புஷ்ப ராஜா, விஜயகுமார், திமுக தகவல் தொழில்நுட்ப அணி காசிநாதன், பாக்கியராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். திமுகவில் இணைந்த பாலா குமார், சத்யராஜ் ஆகியோருக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்புவேலன் ,வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினர்.