கோவை: விபத்தில் வாலிபர் பலி !

கே.என்.ஜி.புதுார் சாலையில் வாலிபர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த லாரி மோதியதில் பலியானார்.

Update: 2025-01-15 12:41 GMT
கோவை சரவணம்பட்டி, கீரணத்தம் ரோட்டை சேர்ந்த ஹரிஸ்வர் (29) என்பவர், கே.என்.ஜி.புதுார் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த லாரி மோதியதில் பலியானார். இந்த விபத்தில் ஹரிஸ்வரின் தலை, கை, இடுப்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News