விருத்தாசலம் அருகே ஆற்று மணல் கடத்திய 4 பேர் கைது
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் அதிரடி நடவடிக்கை
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் பாசிக்குளம் - ஓலையூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிப்பர் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட பாசிக்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (42), ராஜமூர்த்தி (20), ஜெயவேல் (22), பிரித்திவிராஜ் (19) ஆகிய 4 பேரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...