டங்ஸ்டன் எதிர்ப்பு மாட்டு பொங்கல்.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2025-01-15 10:14 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் டங்ஸ்டனுக்கு எதிராக மாட்டு பொங்கல் நடைபெற்றது. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததை தொடந்து பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலை மேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று 'டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்' கொண்டாடபட்டது. இதனை தொடர்ந்து இன்று (ஜன.15) மாட்டு பொங்கலின் போதும் 'வேண்டாம் டங்ஸ்டன்', திட்டத்தை ரத்து செய் போன்ற வாசகங்கள் வரைந்து தங்கள் எதிர்ப்புகளை கிராம மக்கள் பதிவு செய்தனர்.

Similar News