புதுகை திருமயம் அருகே உள்ள ஊனையூரை சேர்ந்த நாகராஜ் என்பவரும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த புனித மலர் (41) என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து கடந்த 28ஆம் தேதி ஊனையூர் தங்கும் விடுதியில் தங்கினர். அப்போது அந்த பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு விடுதியில் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஏஓ பிரவீன் குமார் அளித்த தகவலின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர்.