ஜல்லிக்கட்டில் கார், டிராக்டர் பரிசு.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2025-01-14 15:13 GMT
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 836 காளைகளுடன் 10 சுற்றுகளில் 500பேரும் இறுதி சுற்றில் 36 பேரும் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சார்பாக சிறந்த காலையில் உரிமையாளர் மலையாண்டிக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் கறவை மாடும், இரண்டாம் சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் பைக்-கும் பரிசாக வழங்கிய வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வீரர் கார்த்திக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சார்பாக ஒரு கார் மற்றும் கன்றுடன் கறவை மாட்டினை பரிசாகவும், 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த வீரருக்கு மோட்டார் பைக் ஒன்றை பரிசாகவும் அளிக்கப்பட்டது .

Similar News