பொங்கல் வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டம் மக்களுக்கும், தருமபுரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கும்,தர்மபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்
தர்மபுரி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ் பி வெங்கடேஸ்வரன் தொகுதி மக்களுக்கும் தர்மபுரி மாவட்ட மக்களுக்கும் நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோ பதிவில் செய்தியில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டமாகும் மேலும் இம் மாவட்ட விவசாயிகள் காவிரி உபநீர் திட்டம் குறித்து எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர்களுக்காக கடந்த சட்டமன்றத்தில் பேசியதாகவும் நிச்சயம் இந்த திட்டம் நிறைவேறும் என்றும் சிப்காட் பணிகள் வேகமாக நிறைவடைந்து மாவட்ட மக்கள் பயன்பெற்று சிறப்புடன் வாழ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.