பெரம்பலூரில் தெப்பக்குளத்தில் தெப்பதேர் திருவிழா
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தெப்ப தேரினை இழுத்து தொடங்கி வைக்கிறார். தெப்ப தேரில் ஐயப்பன் எழுந்தளி உலா வந்து அருள்பாலித்தார்.
பெரம்பலூரில் தெப்பக்குளத்தில் தெப்பதேர் திருவிழா பெரம்பலூர் ஐய்யப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழாவையொட்டி நகராட்சி தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் திருவிழா நடை பெறுவது வழக்கம். இதன்படி தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் திருவிழா (14ம்தேதி) இன்று நடைபெற்றது மாலை 7 மணியளவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தெப்ப தேரினை இழுத்து தொடங்கி வைக்கிறார். தெப்ப தேரில் ஐயப்பன் எழுந்தளி உலா வந்து அருள்பாலித்தார். தெப்பகுளத்தை சுற்றிலும் மின்விளக்கு, அலங்கார விளக்கு போடப்பட்டு தெப்பக்குளம் ஜொலித்தது. விழாவில் ராமகிருஷ்ணா கல்வி குழும தலைவர் சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.