ராமநாதபுரம் அதிமுக சார்பில் கபடி போட்டி நடைபெற்றது
பொங்கல் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் காமராஜபுரம் கிராமத்தில் அதிமுக சார்பில் தென் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது நிகழ்ச்சியை மாவட்டக் கழகச் செயலாளர் எம் ஏ முனியசாமி முன்னாள் சட்டமன்ற மலேசியா பாண்டி முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் SD.செந்தில்குமார் ஆகியோர் கபடி போட்டியை வீரர்களுக்கு கைகுலுக்கி ஊக்கி வித்து துவக்கி வைத்தனர் போட்டியில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர் இரண்டு நாட்களாக இரவு பகலாக நடைபெறும் இப் போட்டியில் நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்று வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்கப்பணம் நினைவு பரிசு சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது