சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி, கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-29 14:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் நகராட்சியில் வண்டிப்பேட்டை வசூல் ௹. 20. மட்டும் வசூல் செய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..... பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு , பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றதுசாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை உரை நிகழ்த்தினார்கள், இதில் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகளிடம் வண்டிப்பேட்டை வசூல் அனைவருக்கும் ரூபாய் 20 மட்டுமே வசூல் செய்ய வேண்டும், கூடுதலாக பணம் கேட்டு வலியுறுத்துவதை கைவிட வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்திட வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி, கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐ டி யு மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, செல்லதுரை, மணிமேகலை, செல்வி, ,ஆறுமுகம், புவனேஸ்வரி, சுரேஷ், கோகுல கிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News