கெங்கவல்லி:பச்சமலை மலை வாழ் பழங்குடியினர் 200 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், மா, கொய்யா நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பயிரிடும் நடைமுறைகள் மற்றும் பழம் தரும் இனங்களின் நவீன தொழில் நுட்பங்கள் (ம) காய்கறி பயிர் சாகுபடி குறித்து, பெங்களூரு இந்திய தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர். செந்தில் குமார் விளக்கினார். ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உடன் இருந்தனர்.