கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி
கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி
கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, கடவூர் ஊராட்சியில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் +1,+2 பயிலும் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை, கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷீலா, கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, பள்ளி கல்வித்துறையில், தமிழக அரசு மாணவ- மாணவிகளுக்கு அளித்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, மாணவ - மாணவிகள் மேலும் தங்களது திறன்களை வளர்த்து, வாழும் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக மாறுவதற்கு மாணவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மிதிவண்டிகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர் தமிழக அரசுக்கும் எம்எல்ஏவுக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.