திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கிராம பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பஞ்சாயத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர்கள் அந்தந்த பஞ்சாயத்து யூனியன்களில் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி நாங்குநேரி பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்த 8 பஞ்சாயத்து செயலாளர்கள் நேற்று இடமாற்றம் செய்யபட்டனர். இவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்ட பகுதியில் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.