தமிழக முதல்வரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
ஆரணி, நவ 26. பாமக நிறுவனர் ராமதாஸை தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரணியில் தமிழக முதல்வரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம். பாமக நிறுவனர் ராமதாஸை தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அதானி ஊழலில் தமிழக மின்சாரத்துறையின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதால் இது குறித்து செய்தியாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டதற்கு அவருக்கெல்லாம் பதில் கூற முடியாது என்று தரக்குறைவாக பேசியதை கண்டித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமையில் முதல்வரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்டஅமைப்புச்செயலாளர் வழக்கறிஞர் பாலமூர்த்தி, மாவட்டதுணைசெயலாளர்கள் து.வடிவேல், மு.மெய்யழகன், கு.சிவா, நகரசெயலாளர் சி.ரவிச்சந்திரன், மகளிரணி நிர்வாகி ரேவதி, பேராசிரியர் சிவா, ஒன்றியதலைவர் ரவிவர்மன், ஒன்றியசெயலாளர் அஜீத், வன்னியர் சங்க நகரசெயலாளர் ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.