உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழாவை முன்னிட்டு பரதநாட்டியம்
பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் 4 நாட்கள் பவித்ரோத்ஸவ விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. விழாவின் 2- ம் நாளான நேற்று திருமஞ்சனம்,ஹோமம், பவித்ரம் சாற்றுதல் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெற்றது 3- ம் நாள் நிகழ்வாக இன்று சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமமும் சாற்று முறை கோஷ்டியும் நடைப்பெற்றது.பின்னர் முக்கிய நிகழ்வான மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. பரத நாட்டிய நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் அம்மன் பாடல்களுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பரதநாட்டியம் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். பின்னர் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ,சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபராதணை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்