திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரும் கொட்டாரம் தெற்கு தெரு செல்வக்கனி என்பவரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தங்கராஜ் புளியங்கொட்டாரத்துக்கு வந்தபோது அங்கு வந்த செல்லக்கனி மற்றும் இருவர் சேர்ந்து அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி மிரட்டினர். இது குறித்த புகாரியின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லக்கனியை நேற்று கைது செய்தனர்.