வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் தான் வாழ்க்கையும் வங்கியும் வளம் பெறும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் தான் வாழ்க்கையும் வங்கியும் வளம் பெறும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் தான் வாழ்க்கையும் வங்கியும் வளம் பெறும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம். "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்" கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 13 பேர் கொண்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூபாய் 13 லட்சம், விவசாயிகளுக்கு பயிர் கடனாக 14 பேருக்கு 14,32,000, இதே போல கால்நடை பராமரிப்பு கடனாக 6 விவசாயிகளுக்கு 4,12,000- என மொத்தம் 31,44,000- வங்கி கடன் ஆணைகளை வழங்கினார். அப்போது பயனாளிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல், இது உங்களது வங்கி. நீங்கள் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தினால் தான், உங்கள் வாழ்க்கையும், வங்கியின் வளர்ச்சியும் வளம் பெறும் என தெரிவித்த அவர், வங்கி கடன் பெற்றவர்கள் அனைவரும் சிறப்பாக தொழில் செய்து வாழ்க்கையில் மேன்மை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வங்கியின் செயலாளர் கணேசன் செய்திருந்தார்.