கடற்கரையை சீரமைத்த பக்தர்கள் மற்றும் தனியார் அமைப்பினர்

கன்னியாகுமரியில்

Update: 2024-09-21 15:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சர்வதேச சுற்றுலா தலமான  கன்னியாகுமரி திருவேணி சங்கமம் கடற்கரையில் பழைய கல் மண்டபம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கும்  பகுதியானது மிகவும்  சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.           இந்த நிலையில்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியை பார்வையிட்ட போது, இதனை சீரமைக்க  பொதுமக்களோ  அல்லது தனியார் அமைப்புகளோ முயற்சி எடுக்கலாம் என கூறினார்.  இந்தநிலையில் சர்வதேச கடலோர தூய்மை நாள் இன்று (21-ம் தேதி) உலகம் முழுவதும்  அனுசரிக்கப்பட்டதை   முன்னிட்டு, கன்னியாகுமரி திருவேணி  சங்கமத்தில் குகநதீஸ்வரர்  பக்தர் சங்கத்துடன் பொதுமக்களும் இணைந்து பக்தர்கள் குளிக்கின்ற இடத்தில் சேதமடைந்த  படிக்கட்டை சரி செய்து  குளிப்பதற்கு இடையூறாக உள்ள கற்களை அப்புறப்படுத்தும் பணியில் தனியார் பங்களிப்புடன்  ஈடுபட்டனர்.       கன்னியாகுமரி  பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர்  சுபாஷ் முருகானந்தம், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகி மாருதிராம் மேலும் சிற்ப வேலை கலைஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News