விருத்தாசலம் பாலக்கரையில் வள்ளலார் பணியகம் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைப்பதை கண்டித்து நடந்தது

Update: 2024-09-21 16:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம், வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைப்பதை கண்டித்தும் மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தியும் வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வ தமிழ் பேரவை சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வள்ளலார் பணியகம் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நல்லூர் ஒன்றிய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சண்முகம், வள்ளலார் பணியகம் விருத்தாசலம் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சன்மார்க்க சங்க வழிபாட்டு குழு தலைவர் இளங்கோ, தமிழ்நாடு ஒருங்கிணைந்த சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், வள்ளலார் பணியாகம் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், வள்ளலார் குடில் விருத்தாசலம் இளையராஜா, தெய்வத் தமிழ் பேரவை சிதம்பரம் வேந்தன், வள்ளலார் பணியகம் கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து வள்ளலார் ஆன்மீகத்தை சிதைக்க கூடாது. வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க கூடாது. அதனை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லை என்பதால் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை. அதனால் கூட்டத்தை கலைக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர். இதில் விருத்தாசலம், பெண்ணாடம், வடலூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த வள்ளலார் பணியகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வள்ளலார் பணியகம் அருட்பா பாடகர் பிரதாபன் நன்றி கூறினார்.

Similar News