புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி - நாமக்கல் ஸ்ரீ மஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

ஏராளமான பக்தர்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். திருக்கோவில் வளாகத்தில் வாராஹி யாகம் நடைபெற்றது, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-09-23 16:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை MGR நகரில் (ரயில் நிலையம் அருகில்) ஸ்ரீ தங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ மஹாவாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹாவாராஹி அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏராளமான பக்தர்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். திருக்கோவில் வளாகத்தில் வராஹி யாகம் நடைபெற்றது, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News