பேருந்து நிலையத்தில் தொழிலாளிக்கு கத்தி குத்து. சிதறி ஓடிய பொதுமக்கள்.

பேருந்து நிலையத்தில் தொழிலாளிக்கு கத்தி குத்து. சிதறி ஓடிய பொதுமக்கள்.

Update: 2024-09-25 15:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பேருந்து நிலையத்தில் தொழிலாளிக்கு கத்தி குத்து. சிதறி ஓடிய பொதுமக்கள். கரூர் பேருந்து நிலையம் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. அதே சமயம் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. அதே சமயம் பாதுகாப்புக்காக பேருந்து நிலைய வளாகத்தில் புறக்காவல் நிலையமும் இல்லை காவல்துறையினரும் ரோந்து பணிக்கு முறையாக வருவதில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி குமார் வயது 40 என்பவர் ஒரு பெண்ணுடன் ஊருக்கு செல்ல நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த இரண்டு பேர், குமாரின் கழுத்தில் எதிர்பாராத நேரத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை கவனித்த பொதுமக்கள் அச்சத்தில் நாளா புறமும் சிதறி ஓடினர். கழுத்தில் கத்திக் குத்து காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்த தொழிலாளி குமாரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கரூர் மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News