இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

பூரண மதுவிலக்கு என நாடகம் ஆடுவதை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என குமரன் திருநகரில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

Update: 2024-09-25 19:18 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்து மக்கள் கட்சி கொடி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் ஏற்றினார். இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை ஜி, மாவட்ட முழுநேர ஊழியர் ராமச்சந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் மாசாணம், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், தொண்டரணி தலைவர் சிவா, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் உட்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது, திராவிட முன்னேற்ற கழக அரசாங்கத்தினுடைய கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தை கட்சிகள் ஒரு நிபந்தனையை வைக்க வேண்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்திற்கு அது ஒன்றும் புதிய நிபந்தனை கிடையாது ஏற்கனவே கடந்த காலம் எடப்பாடி பழனிச்சாமி , முதலமைச்சராக இருந்த பொழுது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமே போராட்டம் நடத்தி இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது கடைகளை மூடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் திமுகவினுடைய முக்கிய பிரமுகர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது கடைகளை மூடுவோம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து எல்லாம் வெகு சிறப்பாக அவர் பேசியிருக்கிறார் எனவே திருமாவளவன் வலியுறுத்துவது என்பது மத்திய அரசை நோக்கி அல்ல. இந்த மதுவிலக்கு கொள்கை முடிவுகள் மாநில அரசாங்கத்தினுடைய வரம்பிற்கு உட்பட்டது டாஸ்மாக்கை உருவாக்கியது தமிழக அரசாங்கம் டாஸ்மாக்கை நடத்துவது தமிழக அரசாங்கம் சாராய ஆலைகளை நடத்துவது திமுக அதிமுக சம்பந்தப்பட்ட நபர்கள தான் தனியார் சாராய ஆலைகளிலிருந்து மதுவை வாங்கித்தான், அரசாங்கம் மூலமாக மதுவை பெற்றுக் கொடுக்கிறார் இந்த பூரண மதுவிலக்கு என்பது எல்லா கட்சியினுடைய கொள்கையாகவும் இருக்கிறது. எல்லோரும் எல்லா காலங்களிலுமே இதிலே போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள் இந்த நிலையிலே ஒன்றிய அரசாங்கம் மது கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி போராட்டம் நடத்துவது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தக்கூடிய ஒரு அரசியல் நாடகம் இந்த மதுவிலக்கு கொள்கையை தமிழ்நாட்டில் ஒரு கேலிப் பொருளா மாத்திட்டாங்க. முதன்முதலாக சாராயக்கடை இங்கே தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது சாராயக்கடை திறக்கப்பட்டது திமுக ஆட்சி அமைத்த போது தான் திமுகவினுடைய தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதுதான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. தற்காலிகமானது தான் நாங்கள் வந்து சாராயக்கடை மூடுவோம் என்று அதே கருணாநிதி வாக்குறுதி கொடுத்தார். அவரும் சாராயக்கடைகளை நடத்தினார் அதுக்கப்புறம் உங்களுக்கு தெரியும் ஜெயலலிதா என எல்லா அரசியல்வாதிகள் கட்சிகளாக இருக்கும் போது சொல்லுவாங்க ஆளுங்கட்சி ஆயிட்டாங்கன்னா. சொன்னதை மறந்து விடுவார்கள். பாட்டாளி மக்கள் கட்சி உயர் நீதிமன்றம் எல்லாம் போயி நெடுஞ்சாலை ஓரமாக இருக்கக்கூடிய கடையெல்லாம் மூடனும் உத்தரவு வாங்கிட்டு வந்தாங்க. அப்புறம் நாங்க கடைகள் விற்பனை நேரத்தை குறைக்கிறோம் என திமுகவினர் சொன்னார்கள். இது மதுவை ஒழிப்பதற்கான வழி கிடையாது மதுக்கடைகளை ஒழிப்பது என்பது மிகவும் சுலபமானது அதுவும் இப்ப இருக்குற அரசாங்கத்துக்கு ரொம்ப சுலபமானது. ஒரே ஒரு கையெழுத்து போட்டால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கு காலகட்டங்களில் மதுக்கடையை மூடிட்டா ரெகுலரா குடிச்சு பழகுனவங்க என்ன பண்ணுவாங்க அவங்களுக்கு ஏதாவது ஆயிரும் சொன்னார்கள். ஆனால் ஒன்னும் ஆகல குடிக்காம இருக்க முடியும் இந்த விஷயத்திலும் அவர் வந்து மத்திய அரசின் மேல பலி போட்டு நாங்க வந்து ஒன்றிய அரசு சாராயத்தை மூடு அப்டின்னு சொல்லி ஒரு அரசியல் நாடகம் இது எல்லாருக்கும் தெரியும். திமுக ல இன்னும் கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தணும் ஒன்னும் அதிக சீட்டு வேணும் இல்லையா அதனால என்ன இருந்தாலும் மது ஒழிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை அதே மாதிரி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் அந்த கோரிக்கையோடு இன்னொரு கோரிக்கையும் கூடவே வந்துகிட்டு இருக்காது நியாயமான கோரிக்கை கள்ளுக்கடைகளை திறக்கணும். ஏன் திருமாவளவன் இதை சொல்லவில்லை. விவசாயிகள் நல்லா இருப்பார்கள். ஏதாவது ஒரு முடிவுக்கு இந்த அரசாங்கம் பூரண மதுவிலக்கு தான் எல்லாருடைய கொள்கை அதனால திருமாவளவன் இந்த அரசியல் நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது அக்டோபர் இரண்டாம் தேதி திண்டுக்கல் மட்டும் மதுரை ஆகிய ஊர்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஐந்து மதுபான கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தியும் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Similar News