திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது இதில்வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சரவணன் என்பவர் இருந்து வருகிறார் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இங்கு வந்து புதுப்பித்தலுக்கும் புது லைசன்ஸ் பெறவும் வருவார்கள்இங்கு அனைத்து விதமான காரியங்கள் நிறைவேற்றவும் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாலை சுமார் 4:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இதில் டிரைவிங் ஸ்கூல் புரோக்கர்கள் உள்ளிட்ட பலரும் இருப்பதாக கூறப்படுகிறது புகார் கொடுத்த வருடம் தனியாக விசாரணை நடத்தப்படுகிறது விசாரணையின் முடிவில் தான் என்ன கைப்பற்றப்பட்டது யார் கைது செய்யப்படுகிறார்கள் என்ன விசாரணையின் முடிவு என்பது குறித்து முறையாக தெரிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தெரிவித்தார்.