வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

Update: 2024-09-26 03:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மாவட்ட செயற்பொறியாளர் (பொது) முருகேசன் தலைமையில், ஆலங்குடி கோட்ட பொறியாளர் நடராஜன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் ஆலங்குடி நகரில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புக்கு கூடுதலாக யூனிட்டுகள் ஓடுகிறதா? ஒரே வீட்டில் அதிகமான மின் சப்ளை தேவைப்படும். ஆனால் ஒரு இணைப்பு மட்டுமே பெற்றுக்கொண்டு பல்வேறு வகைகளில் மின் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்வது போன்ற 10-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளில் கூடுதலாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்துள்ளனர். இவர்கள் மீது விசாரணை செய்து விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

Similar News