நாட்றம்பள்ளி அருகே புத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடு வெட்டும் கத்தியை வைத்து மிரட்டிய மது பிரியரால் பரபரப்பு
நாட்றம்பள்ளி அருகே புத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடு வெட்டும் கத்தியை வைத்து மிரட்டிய மது பிரியரால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே புத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடு வெட்டும் கத்தியை வைத்து மிரட்டிய மது பிரியரால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்தக்கல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த வேலு என்பவரின் மகன் கமல் (38 ) இவர் இன்று அதிகாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புத்துகோயில் பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடு வெட்டும் கத்தியை வைத்து மது போதையில் கோயிலின் சுவர்களை வெட்டியுள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தடுக்க சென்றபோது யாரேனும் கோயிலுக்குள் வந்தால் வெட்டி விடுவேன் என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். அதன்பின் அங்கிருந்த பொதுமக்கள் மது போதையில் இருந்த நபரின் பின்புறம் சென்று அந்த கத்தியை பிடுங்கினர். அதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது போதையில் ஆடு வெட்டும் கத்தியை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...