ஆம்பூரில் சாலை பாதுகாப்பு வார விழா

ஆம்பூரில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது

Update: 2024-09-28 07:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சாலை பாதுகாப்பு வார விழா திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் ஆம்பூர் நகரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் வாழ்த்துக்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆம்பூர் நகர பேருந்து நிலையம் மற்றும் பைபாஸ் சாலை விநாயகர் கோவில் அருகில் வாகனத்தில் இரவு நேர கண் கூசும் ஒளியை தடுக்க கருப்பு sticker ஒட்டப்பட்டது. மேலும் தலை கவசம் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Similar News