நாட்றம்பள்ளி அருகே நந்தி ராயர் கோயிலில் சிறப்பு விழா
நாட்டரம்பள்ளி அருகே நந்தி ராயர் கோயிலில் சாமி வீதியுலா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நந்தி பெண்டா கிராமத்தில் நந்திராயர் கோயிலில் தாய்வீடு சீதனத்துடன் கோயிலை வலம்வந்த ஆஞ்சனேயர் திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நந்திபெண்டா கிராமத்தில் மிகவும்பழமையான பிரசித்தி பெற்ற சக்திவாய்ந்த நந்திராயர் கோயில் உள்ளது இந்த கோயிலில் வருடம் ஒருமுறை புரட்டாசிமாதம் வரும் சனிக்கிழமைகளில் நந்தி ராயர் கோயிலில் மிகவும்சிறப்பு வாய்ந்த விழா நடைபெற்று வருகிறது இன் நிலையில் நந்தி ராயர் கோயிலுக்கு பாரம்பரியமாக ஆம்பூர் பகுதியில் இருந்து தாய் விட்டு சீதனமாக தட்டு வரிசையுடன் ஆஞ்சநேயர் சிலைகளை தலை மேல் சுமந்து வான வேடிக்கையுடன் மேல தாளங்களுடன் இன்னிசை முழங்க இந்த நந்தி ராயர் கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தது இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் முழுக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக நந்திறாயர் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பல வண்ண மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை சமர்ப்பித்து மேல தாளங்கள் இன்னிசை முழுங்க பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர் இந்த விழா நிகழ்ச்சியில் கோயில் நிருவாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்