நாட்றம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபருக்கு தர்மஅடி
நாட்றம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபருக்கு தர்மஅடி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முயற்சி செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! மயக்க நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் வேடிவட்டம் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுண்டர் மகன் தேவேந்திரன் (67) இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பாலா, பாஸ்கர் என்ற மகன் வேலூரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் தேவேந்திரன் மற்றும் அவருடைய மனைவி ஈஸ்வரி ஆகிருவரும் தனது மகனை பார்க்க வேலூருக்கு சென்றுள்ளனர். அப்போது இன்று இரவு எட்டு மணி அளவில் திடீரென தனது மொபைலில் இருந்து வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போது மூன்று மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பூட்டை உடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது இதனால் அதிர்ந்து போன தேவேந்திரன் உடனடியாக தங்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் வீட்டின் அருகில் சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் திருட முயற்சி செய்த மூன்று பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர் அப்போது அங்கிருந்து இருவர் தப்பி ஓடினர் மேலும் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர் இதன் காரணமாக அந்த நபர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கையில் விரைவில் வந்த போலீசார் மயக்க நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மயக்க நிலையில் இருந்து நினைவு திரும்பினால் மட்டுமே திருட முயற்சி செய்த நபர் யார் எந்த பகுதியை சார்ந்தவர் என விசாரிக்க முடியும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய இருவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டை பூட்டிவிட்டு மகனைப் பார்க்க சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முயற்சி செய்து திருடன் தர்ம அடி வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.