கரூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2024-09-30 13:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது. இன்று செப்டம்பர் 30 கரூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நாள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்த கரூரை பிரித்து கரூர் மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தது. இதனை கொண்டாடும் விதமாகவும் கரூரின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாகவும் கரூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை சார்பாக அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த வரலாற்று இடங்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் நாணயங்கள் கண்காட்சியும் இன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை அரசு கலைக்கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று துறை தலைவர் செல்வகுமார், வரலாற்று துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவ- மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, கரூரின் சிறப்புகள் அறிய அமைக்கப்பட்ட கண்காட்சியை கண்டு களித்தனர்.

Similar News