புரட்டாசி மாசம் நாட்டுக்கோழி விலை சரிவு.
புரட்டாசி மாசம் பரமத்தி வேலூர் வார சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, ஞாயிறு தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுகிறது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் புரட்டாசி மாத விரதத்தையொட்டி நாட்டு கோழிகளை வாங்க பொதுமக்கள் பெருமளவில் வராததால் நாட்டுக்கோழி விலை சரிவடைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி ரூ.450 க்கும், வளர்ப்பு பன்னைக்கோழி ரூ. 350 க்கும் விற்பனையானது.விலை குறைந்தும் கோழிகள் வாங்க யாரும் முன் வராததால் நேற்று நாட்டுக்கோழி ரூ. 400 க்கும், வளர்ப்பு பன்னைக்கோழி ரூ. 300 கற்கும் விற்பனையானது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் நாட்டுக் கோழி விலை சரிவடைந்துற்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோழிசந்தைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.