வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம்
முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அலங்காந்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வழிகாட்டுதலின் படி,தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை-IV-ன் கீழ் சாத்தையாறு உபவடி நிலப் பகுதியில் தொடங்கப்பட்ட அலங்கா நல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அலங்காந்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிறுவனத்தின் தலைவர் தனிராஜன் வரவேற்புரை வழங்கினார். இக்கூட்டத்திற்கு, மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம், மெர்ஸி ஜெயராணி தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து வேளாண்மை அலுவலர், வேளாண் வணிகம் மதுரை கோட்டம் சித்தார்த் உழவர் நிறுவனத்தின் திட்டமிடல் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் மதிப்பு கூட்டி விற்பதற்கான வழிகாட்டி நெறிமுறை அறிவுரைகளை வழங்கினார். மேலும், உதவி வேளாண்மை அலுவலர்கள் சண்முகசுந்தரபாண்டி வேளான் வணிகம் , மதுரை மேற்கு , பரமேஸ்வரன் வேளாண் வணிக நிறுவனத்தின் உறுப்பினர் களுக்கு, பல்வேறு திட்டங்கள் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் மூலம் மகளிர் குழுக்களுக்கு உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டமதிப்பு கூட்டல்சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்ட 15 உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் , வழங்கப்பட்டது. மேலும்,தேசிய வேளாண் நிறுவனத்தின் அணித்தலைவர் முருகானந்தவேல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் பயன்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது குறித்த செயல் விளக்க கையேடுகள் வழங்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இயக்குனர்கள் தங்கராஜ் துணைத்தலைவர், அனுமதி பாண்டி, தேன்மொழி, த.மயில்வாகனன், ஆறுமுகம், சாக்கரடீஸ், வெள்ளையன், தேசிய வேளாண் நிறுவனத்தின் சந்தை பகுப்பாய்வாளர் அருள்குமார், கணக்காளர் முருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட அனைத்து செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் உறுப்பினர்களின் முன்னிலையில் ஒருமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ராஜபாண்டி நன்றி உரையாற்றினார்.