விராலிமலை அருகே சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை விற்றவரைப் போலீஸார் கைது செய்தனர். விராலிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் விராலிமலை போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல் துறையினர் விராலிமலை - புதுக்கோட்டை சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இலுப்பூரைச் சேர்ந்த கருப்பையா (68) என்பவர் புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அருகே அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, விற்பனைக்காக அவர் வைத்திருந்த 28 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.