ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரீடா பாரதி அமைப்பு சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது.

சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு தொடு முறை விளையாட்டுகளில் வீரர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.

Update: 2024-11-25 15:54 GMT
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரீடா பாரதி அமைப்பு சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது.இந்த அமைப்பின் மாநில மாநாட்டை முன்னிட்டு நடந்த போட்டிகளை அமைப்பின் மாநில தலைவர் திருமாறன் துவக்கி வைத்தார்.மாநிலச் செயலாளர் பெரியசாமி மாநில துணைத் தலைவர் சேதுரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு தொடு முறை விளையாட்டுகளில் வீரர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளிகள், கல்லுாரி மாணவ மாணவிகள், அகாடமியில் பயிற்சி பெறும் 400க்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில்கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கிரீடா பாரதி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News