கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் பார்மஸி கல்லூரி துவக்கம்

கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் பார்மஸி கல்லூரி துவக்கம்

Update: 2024-11-26 01:36 GMT
கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் பார்மஸி கல்லூரி துவக்கம் கே.எஸ்.ஆர் கல்வி குழுமத்தில் புதிய கல்லூரியாக கே.எஸ்.ரங்கசாமி பார்மஸி கல்லூரி தெடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர். கே.நாராயணசாமி திறந்து வைத்து கல்லூரியை பார்வையிட்டார். மேலும் அவர் தனது வாழ்த்துரையில் மாணவர்கள் அனைவரும் மருந்தியல் துறையில் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் மற்றும் தங்களுடைய தனித்திறமையை வளர்த்துக்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மருந்தியல் துறையில் மருந்தினுடைய தன்மை, அது செயல்படும் விதம் பற்றி தெளிவாக விளக்கி கூறினார். மாணவர்களுக்கு அவர்களுடைய மேம்பாட்டுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கான அறிவுரைகளையும், மாணவர்களுக்கு தங்கள் துறையின் ஆர்வம், ஈடுபாடு, தனி அடையாளம் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார். மேலும் தங்களைடைய மருந்தியல் துறையில் மருந்தினுடைய தன்மை, மருந்தை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார். இவ்விழாவிற்கு கல்லூரிகளின் தலைவர் திரு.ஆர்.சீனிவாசன், துணை தலைவர் திரு.கே.எஸ்.சச்சின் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு.வி.மோகன், பார்மஸி கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஜி.ரத்தினவேல், கே.எஸ்.ஆர் பல்மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். சரத்அசோகன், கே.எஸ்.ஆர் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். உத்ராமணி, கே.எஸ்.ஆர் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர். வி. ராம்குமார் அவர்களும் விழாவினை சிறப்பித்தனர். விழாவில் கே.எஸ்.ஆர் நிறுவனங்களின் அனைத்து கல்லூரி முதல்வர்களும், மாணவ மாணவியர்களும் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றார்கள்.

Similar News