வேலூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
ஒப்புதல் தீர்மானங்களை பதிவு செய்யாத கண்டித்து வேலூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளூர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர், அக்.01- நாமக்கல் மாவட்டம், வேலூர் பேரூராட்சியின் மாதாந்திர நிகழ்முறை கூட்டம் நேற்று பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயல் அலுவலர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி தலைமை வகித்தார். கூட்டத்தில் 15 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் வசிக்கப்பட்டது. அவற்றில் சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மன்ற கவுன்சிலர்களின் ஒப்புதல் மற்றும் எதிர்ப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பினர். எனினும் தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட நிலையில் ஆறாவது வார்டு உறுப்பினர் செந்தில் பேரூராட்சி அலுவலரால் வாசிக்கப் பட்ட தீர்மான நகலை பறித்துச் சென்றதால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து செயல் அலுவலர் சோமசுந்தரம், பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி மற்றும் சில உறுப்பினர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 10 உறுப்பினர்கள் பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலரின் சுய விருப்பு வெறுப்பு காரணமாக பேரூராட்சியின் செயல்பாடுகள் முடக்கப்படுவதாகவும், புதிய பேரூராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 செயல் அலுவலர்கள் மாற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள் தடைபடுவதாகவும் பொது மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை கலைய மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.