வேலூர் தமிழ்ச் சங்கம் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் இணைந்து பனை விதை நடவு.
நன்செய் இடையாறு காவிரிக்கரை ஓரத்தில் வேலூர் தமிழ்ச்சங்கம் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து பனை விதை நடவு செய்தனர்.
பரமத்தி வேலூர், அக். 01: பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு காவிரி கரையோர பகுதிகளில் வேலூர் தமிழ்ச் சங்கம் வேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சேர்ந்து நன்செய் இடையாறு ஊராட்சி நிர்வாக உதவியுடன் பனை விதை நடுவதற்கான ஏற்பாடுகளை தலைவர் செந்தில் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு வேலூர் தமிழ் சங்க தலைவர் இக்பால் முன்னிலை வகித்தார். இயற்கை ஆர்வலர் குகநாதன் பனை விதை நடவு செய்வதால் பனை மரத்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பனை மரத்தால் மழைப்பொழிவை ஈர்க்கப்பட்டு நிலத்தடி நீர் தக்கவைக்கப்படுவதால் புவி வெப்பமயம் ஆவதை தடுக்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்க நிர்வாகிகள் செந்தில்குமரன், பார்த்திபன், சரவணன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் ஊராட்சி மன்ற பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.