உடுமலையில் ஐஎன்யூசி சார்பில் காந்தி ஜெயந்தி விழா

நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-10-02 15:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள காமராஜர் பவனில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின்(ஐ.என்.டி.யு.சி) சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஐ.என்.டி.யு.சி தலைவர் கோவை செல்வன் தலைமை வகித்தார்.உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி வரவேற்புரை வழங்கினார்.அதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்டோர் மகாத்மா காந்தி,முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து உடுமலை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கும்,பழைய பஸ் நிறுத்தத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், ராஜேந்திரா சாலையில் உள்ள நேரு சிலைக்கும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐ.என்.டி.யு. சி பொருளாளர் உத்தமராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், லோகநாதன்,கிட்டுசாமி,மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் , அலுவலகப் பொறுப்பாளர் குப்புராஜ் உள்ளிட்ட ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க நிர்வாகிகள்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News